தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் முதலானாவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் நடித்த படங்கள் தெலுங்கில் சூப்பர், டூப்பர் ஹிட்டாகும். தெலுங்கில் இவர் நடித்த 'ஒக்கடு' தமிழில் 'கில்லி' என்ற பெயரில் ரீமேக் ஆனது.
சமீபத்தில்கூட பிரபல போர்ப்ஸ் பத்திரிகை நடத்திய இந்தியாவின் தலைசிறந்த பிரபலங்கள் பட்டியலில் தென்னிந்திய நடிகர்களில் மகேஷ் பாபு தான் முன்னணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனும், மகேஷ் பாபுவும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இருவரும் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளனர். இதனை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, நான் மகேஷ் பாபு அவர்களை சந்தித்தேன். அவர் மிகவும் எளிமையானவர். தன்னடக்கம் உள்ளவர். எனக்காக நேரம் ஒதுக்கியதற்கு அவருக்கு நன்றி. அவரை சந்தித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட்டாகியுள்ளது. தற்போது இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'காக்கிச்சட்டை' படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Tamil Friends
Tamil Kavithaikal, Tamil Kavithai, Tamil Shares, Tamil News
Wednesday, February 11, 2015
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை சந்தித்த சிவகார்த்திகேயன் sivakarthikeyan meet makesh babu
Tuesday, February 10, 2015
காங்கிரஸ் வேட்பாளர்கள் 63 டெபாசிட் இழந்தனர்
| டெல்லி தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் 63 பேர் டெபாசிட் இழந்தனர் புதுடெல்லி: டெல்லியில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட் இழந்தது அக்கட்சியின் மேலிடத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. |
ஓர் மற்றும் ஒரு ...... தமிழ்
ஓர் மற்றும் ஒரு ..............., தமிழ் அழகானதொரு வடிவமைப்பை கொண்ட மொழி ......., உதாரணங்கள் ஏராளம் ., அதற்கோர் உதாரணம் ஓர் - உயிர் எழுத்தை முதலாய் கொண்ட சொற்களுக்கு முன் வரவேண்டும். ஒரு -மற்ற எழுத்துக்களை முதலாய் கொண்ட சொற்களுக்கு முன் வர வேண்டும் .
Subscribe to:
Comments (Atom)
